பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக இயக்குநர் மணிரத்னம் தேசிய விருதைப் பெற்றார்.
2022-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழில் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ’பொன்னியின் செல்வன்-1' சிறந்த திரைப்படத்திற்கான பிரிவில் அதன் தயாரிப்பாளர்களாக மணிரத்னம், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன், அதே படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்காக ரவி வர்மன், சிறந்த பின்னணி இசைக்கு ஏ. ஆர். ரஹ்மான், சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கினார்.
விருது பெற்ற பின்பு இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்த செய்தியாளர், ‘இந்த விருதை யாருக்காவது சமர்ப்பிக்க வேண்டுமென்றால் அது யாராக இருக்கும்?’ எனக் கேட்டார். அதற்கு மணிரத்னம், ‘இது எல்லாத்தையும் என்னுடனே வைத்துக்கொள்வேன்’ எனப் பதிலளித்தார். மணிரத்னம் இப்படி சொன்னது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: விரைவில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண விடியோ!