
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். ஆனால், இறுதியாக இயக்கிய டிஎஸ்பி திரைப்படம் பெரிய தோல்விப்படமானது.
இதனால், பொன்ராம் படத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் தயங்கினர்.
தற்போது, மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து புதிய படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நகைச்சுவை கலந்த இக்கதையில், ரௌடியாக சண்முக பாண்டியன் நடித்து வருகிறாராம். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடிக்கின்றனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இப்படத்திற்கு ‘கொம்புசீவி’ எனப் பெயரிட்டுள்ளதை போஸ்டர் வெளியிட்டு தெரிவித்ததுடன் படத்தின் கதை 1996-ல் நிகழ்வதையும் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.