வேட்டையன் திரைப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வியாழக்கிழமை வெளியானது.
ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள படமென்பதால் ஆரம்பம் முதலே வேட்டையன் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நினைத்த வரவேற்பைப் பெறாததால், வேட்டையனுக்கான டிக்கெட் முன்பதிவுகள் சுமாராகவே இருந்தன.
இதையும் படிக்க: பிக் பாஸ் - 8: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!
இதனால், முதல் நாளில் இந்தியளவில் வேட்டையன் ரூ. 30 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. ஜெயிலரின் முதல் நாள் வசூலான ரூ.48 கோடியை முறியடிக்கவில்லை. ஹிந்தியில் வெறும் ரூ. 6 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது.
தொடர்ந்து, வேட்டையனுக்கு கிடைத்த வரவேற்பால் இப்படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இப்படம் முதல் மூன்று நாளில் இந்தியளவில் ரூ. 85 கோடியையும் உலகளவில் ரூ. 120 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.