காதலனிடம் அடிவாங்கிய பிக் பாஸ் செளந்தர்யா!

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகை செளந்தர்யா தனது காதல் அனுபவங்கள் குறித்து கூறியுள்ளார்
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யா
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யா படம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகை செளந்தர்யா தனது காதல் அனுபவங்கள் குறித்து கூறியுள்ளார். அதில், தனது காதலரிடம் சாலையில் அடிவாங்கியது குறித்தும், பாட்டிலில் அடி வாங்கியது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகை செளந்தர்யா போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். ஒருசில திரைப்படங்களிலும் வேற மாறி ஆபிஸ் என்ற இணையத் தொடரிலும் நடித்திருந்தார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் நபர்களின் பட்டியலில் (நாமினேஷன்) இருந்தார். எனினும் அதிகப்படியான வாக்குகள் பெற்று போட்டியில் நீடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும், ரசிகர்கள் பட்டாளங்கள் ரசிகர் பக்கங்களை (ஃபேன் பேஜ்) திறப்பது வழக்கம். அந்தவகையில் இந்த சீசனில் அதிக ரசிகர் பக்கங்களைக் கொண்டவர் செளந்தர்யா. இது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மட்டுமே உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் தனது காதல் அனுபவங்கள் குறித்து சக போட்டியாளர்களிடன் செளந்தர்யா கூறியுள்ளார். தனது சோக அனுபவங்களை கேலி மற்றும் நகைச்சுவை உணர்வோடு கூறும் செளந்தர்யா, காதல் குறித்து பேசும்போது வருத்தத்துடன் பேசுகிறார்.

சாலையில் காதலனிடம் அடி

''11ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு நபரை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அந்த காதல் கல்லூரி வரைக்கும் நீடித்துவந்தது.

ஆனால், நான் வெளியே செல்வது நான் காதலித்த அந்த நபருக்கு சுத்தமாகப் பிடிக்காது. அடிக்கடி அவரிடம் நான் அடி வாங்கி இருக்கிறேன்.

கல்லூரி படிக்கும் நேரத்தில் நான் மாடலிங் துறையில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தது அவருக்கு சுத்தமா பிடிக்கவில்லை.

ஒருநாள் அவருக்கு தெரியாமல் நான் மாடலிங் போட்டோ சூட் எடுத்திருந்தேன். அந்த புகைப்படங்களை என்னுடைய செல்போனில் மறைத்து (ஹைட்) செய்து வைத்திருந்தேன். அதை ஒரு முறை அவர் பார்த்துவிட்டார். நடு ரோட்டில் வைத்து என்னை அடித்தார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: வைல்டு கார்டு போட்டியாளராகச் செல்கிறார் அர்ணவ் மனைவி?

அதற்கு முன்பு ஒரு முறை ஒரு சின்ன பிரச்சனை வந்த போது தக்காளி ஜூஸ் இருந்த பாட்டிலை தூக்கி அடித்துவிட்டார். அதற்குப் பிறகும் நான் அவரிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன்.

ஆனால், போட்டோசூட் எடுத்ததற்காக என்னை நடுத்தெருவில் வைத்து அடித்த பிறகுதான் அவரிடமிருந்து விலகி விட்டேன். நான் வேலை செய்வது எனக்கு முக்கியம் என இந்த முடிவை எடுத்தேன்'' என சோகத்துடன் குறிப்பிட்டார்.

சக போட்டியாளர்கள் இதனை வன்மையாகக் கண்டித்து, செளந்தர்யாவின் முடிவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர். சமூகவலைதளத்தில் பலரும் செளந்தர்யாவுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com