லாரன்ஸ் பிஷ்னோய் கேங்ஸ்டரின் வாழ்க்கை: இணையத் தொடராக!!

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கையை வெப் சீரிஸாக தயாரிக்கப்படவுள்ளதாக தயாரிப்பாளர் அறிவிப்பு
லாரன்ஸ் பிஷ்னோய்
லாரன்ஸ் பிஷ்னோய்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் சம்பந்தப்பட்ட கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கை வெப் சீரிஸாக தயாரிக்கப்படவுள்ளது.

குண்டர் வழக்கில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் வாழ்க்கை குறித்த இணையத்தொடரை தயாரிக்கப்படவிருப்பதாக நொய்டாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் அமித் ஜானி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தத் தொடருக்கு லாரன்ஸ் - ஒரு கேங்க்ஸ்டர் ஸ்டோரி என்று பெயரில், ஃபயர் ஃபாக்ஸ் ஃபிலிம் புரொடக்ஷனின்கீழ் தயாரிக்கப்படவுள்ளது. இந்தத் தொடரில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் தீபாவளிக்கு பிறகு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது பஞ்சாப் சபர்மதி மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

1998 ஆம் ஆண்டு, பிளாக்பக் இனமான்களை ஹிந்தி நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதற்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிளாக்பக் இனமான்களை பிஷ்னோய் இனத்தவர் வணங்கி வருகையில், அதனை வேட்டையாடியது, அவர்களைக் காயப்படுத்தி விட்டதாக, சுமார் 25 ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, மான்களை வேட்டையாடியதற்காக, சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சிலர் பல ஆண்டுகளாக முயற்சியும் செய்து வருகின்றனர்.

தற்போது, மான்களை வேட்டையாடியதற்காக சல்மான் கான் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பிஷ்னோய் இனத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், சல்மான் கான் ரூ. 5 கோடி கொடுத்தால் மட்டுமே, அவர் மீதான கொலை முயற்சிகள் கைவிடப்படும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது.

மேலும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோ் நகரில் அக். 12 ஆம் தேதி, இரவில் மூன்று போ் துப்பாக்கியால் சுட்டனா். இந்த தாக்குதலில் பாபா சித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com