மகாராஜா - சிங்கம்புலி குறித்து விஜய்யின் பார்வை... ஆச்சரியப்பட்ட இயக்குநர்!
நடிகர் விஜய் மகாராஜா திரைப்படத்தைக் குறித்து சொன்ன கருத்துகளை இயக்குநர் நித்திலன் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி வெளியீட்டிலும் உலகளவில் வரவேற்பைப் பெற்றது. திரையரங்கில் 100 நாள்கள் கடந்ததும் தயாரிப்பாளர்கள் இயக்குநருக்கு சொகுசு காரை பரிசளித்தனர்.
இதையும் படிக்க: வெங்கட் பிரபு இயக்கத்தில் ரஜினி?
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் நித்திலன் சாமிநாதன், “மகாராஜா படத்தைப் பார்த்த நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டினார். ஒரு பெரிய கமர்சியல் நடிகர் இப்படியெல்லாம் படம் பார்ப்பாரா என்கிற அளவிற்கு மகாராஜா குறித்து அவர் சொன்ன விவரங்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. முக்கியமாக, சிங்கம்புலி மற்றும் மகள் கதாபாத்திரத்திரங்களுக்கு இடையான அவருடைய பார்வையும் புரிதலும் ஆச்சரியப்பட வைத்தன” எனத் தெரிவித்தார்.
நித்திலன் சாமிநாதன் அடுத்ததாக நடிகை நயன்தாராவை மையக் கதாபாத்திரமாக வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாகத் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.