
நடிகர் டொவினோ தாமஸ் கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமானது. அப்படத்தில், மோகன்லாலின் உதவியாளராக சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்திருப்பார்.
அதேநேரம், முதல் பாகத்தில் கேரள மாநில முதல்வரின் மகனாக ஜித்தின் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடித்து இளம் அரசியல் தலைவராக கவனம் பெற்றார்.
இதையும் படிக்க: மீண்டும் படப்பிடிப்பில் ரஜினி!
தற்போது, எம்புரான் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் நடிகர் டொவினோ தாமஸ் கேரளத்தின் இளம் முதல்வராக நடித்துக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இறுதியாக, டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ஏஆர்எம் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.