
நடிகர் யஷ் தன் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசியுள்ளார்.
கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 திரைப்படங்கள் நடித்து இந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகரானார் யஷ். தற்போது, மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட் பட்ஜெட்டில் உருவாகிறது. நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 49-வது வயதில் மீண்டும் சிக்ஸ்பேக் வைத்திருக்கிறேன்: சூர்யா
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் யஷ், “ கேஜிஎஃப் - 3 படம் எப்போது வரும் என பலரும் என்னிடம் கேட்டு வருகின்றனர். ராக்கி பாயாக என்னை ஏற்றுக்கொண்டதால் யாரும் மறக்கவில்லை. கேஜிஎஃப் - 3 பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். சரியான நேரம் வரும்போது அது நிகழும். டாக்ஸிக் படத்தைத் தொடர்ந்து ராமாயணா படத்தில் ராவணனாக நடிக்கிறேன்.
அதில், இணை தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளேன். ராவணன் கதாபாத்திரம் குறித்த நிறைய விஷயங்களை அறிந்துகொண்டேன். இதுசார்ந்த விஎஃப்எக்ஸ் பேச்சுவார்த்தைகளிலும் இருந்திருக்கிறேன். இது, சர்வதேச திரைப்படமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.