தேசிய விருதுக்குப் பிறகும் கிண்டல்களால் பாதிக்கப்படும் ஆலியா பட்..!

பாலிவுட் நடிகை ஆலியா பட் தான் இப்போதும் கிண்டல்களுக்கு உள்ளாகுவதாகக் கூறியுள்ளார்.
நடிகை ஆலியா பட்
நடிகை ஆலியா பட்
Published on
Updated on
1 min read

2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான நடிகை ஆலியா பட் கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.

ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.

ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். இந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

1 தேசிய விருது 6 ஃபிலிம் ஃபேர் விருதுகள் பெற்றுள்ள ஆலியா பட் தான் இப்போதும் கிண்டல்களுக்கு உள்ளாகுவதாகக் கூறியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் ஆலியா பட் கூறியதாவது:

நானும் ரன்பீரும் வித்தியாசமாக சூழலை அணுகுவோம். ஆனால், அப்படியிருந்தும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்போம். அன்புடனும் மரியாதையுடனும் வேலையில் கவனம் செலுத்தி எங்களது வாழ்க்கையில் அதுவும் முக்கியமான ஒன்றாக பார்க்கிறோம். ஆனால், அது மட்டுமே உலகம் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

நான் இப்போது அம்மாவாக இருக்கிறேன். எனக்கு குடும்பமே முதன்மையான முக்கியத்துவம். உடல், மனம், உணர்ச்சிகள் ரீதியாக நான் முதலில் அம்மாவாகவே இருக்கிறேன்.

நான் இப்போதும் கிண்டல்களுக்கு உள்ளாகுகிறேன். வெறுப்பைத் தூண்டும் கமெண்டுகள் சமூகவலைதளங்களில் வருகின்றன. என்னுடைய படங்கள்தான் அதற்கு பதிலடியாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதுதான் என்னையும் எதிர்மறையான கருத்துகளையும் பாதுகாக்கும் சுவராக கருதுகிறேன். வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது.

கரீனா, ஐஸ்வர்யா ராய், ஸ்ரேயா கோஷல் அவர்களது வாழ்க்கையில் அவர்களது தனித்துவத்தினால் மிளிர்கிறார்கள். நான் அதைத்தான் என்னுடைய கதாபாத்திரங்களில் கொண்டு வர விரும்புகிறேன் என்றார்.

சமீபத்தில் வெளியான ஜிக்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

இதற்கடுத்து ஷர்வாரியுடன் இணைந்து ஆல்ஃபா எனும் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். அதற்கடுத்து கணவர் ரன்பீருடன் இணைந்து லவ் அண்ட் வார் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com