கங்குவா இசை வெளியீட்டு விழா..!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கங்குவா போஸ்டர்.

கங்குவா போஸ்டர்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. பின், வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டால், கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தப் படத்தில் பாபி தியோல், திஷா பதானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அதிக அளவிலான திரைகளில் இந்தப்படம் வெளியாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...