நடிகர் ராகவா லாரன்ஸ் தனது 25ஆவது படமான கால பைரவா படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
நடன இயக்குநராக தொடங்கிய சினிமா பயணத்தில் மைல் கல்லாக 25ஆவது படத்துக்கு முன்னேறியுள்ளார்.
தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மாவின் இயக்கத்தில் தனது 25ஆவது படமான கால பைரவா படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினை நீலத்ரி புரடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
கால பைரவா படம் பான் இந்திய சூப்பர் ஹீரோ படமாக உருவாகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என விரைவில் அறிவிப்பு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படம் இந்தாண்டு இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.