ஆந்திரம், தெலங்கானா வெள்ள நிவாரணம்: ரூ. 1 கோடி வழங்கிய மகேஷ் பாபு!

நடிகர் மகேஷ் பாபு ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 1 கோடி வழங்கியுள்ளார்.
நடிகர் மகேஷ் பாபு
நடிகர் மகேஷ் பாபு
Published on
Updated on
1 min read

வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா இடையே வங்கக்கடலில் கடந்த வியாழக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.

இதன் காரணமாக ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கடந்த மூன்று நாள்களாக கனமழை நீடித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் இதுவரை மழை வெள்ளத்தில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

21,000 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆர் 1 கோடி ரூபாயை வழங்கியுள்ள நிலையில் தற்போது மகேஷ் பாபுவும் வழங்குவதாகக் கூறியுள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு
பாலியல் புகார்: நிவின் பாலி விளக்கம்!

தனது எக்ஸ் பக்கத்தில் மகேஷ் பாபு கூறியதாவது:

வெள்ளம் இரண்டு தெலுங்கு மாநிலங்களையும் பாதித்துள்ளது. ஆந்திரம், தெலங்கானா இரண்டு மாநிலங்களுக்கும் தலா ரூ.50 லட்சத்தை ஒப்படைக்கிறேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி உதவிகளை வழங்கவும் மீட்பு செயல்முறையை எளிதாக்கவும் அந்தந்த அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் கூட்டாக ஆதரவளிப்போம். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்னைகளை தாண்டி வலுவாக திரும்புவோம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com