
பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலம் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் - 8 சீசனை தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது, நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. விரைவில், போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.