நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விக்ராந்த். இவர் நடிகர் விஜய்யின் சகோதரர் உறவுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு படங்களின் மூலம் கவனம் பெற்றார்.
ஓடிடியில் வெளியாகாத லால் சலாம்
கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் விக்ராந்த் நடித்திருந்தார்.
இந்தப் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இதுவரை எந்தவொரு ஓடிடியிலும் வெளியாகாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய படம்
தற்போது, வில் அம்பு பட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பிக் பேங் சினிமாஸ் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (செப்.7) மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது.