
இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் சரவண பவன் ராஜகோபால் வழக்கு திரைப்படமாகிறது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாகக் கொண்டு தனது புதிய படத்தை ஞானவேல் இயக்கவிருக்கிறார்.
சரவண பவன் என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி வந்த ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தி கொலை செய்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு நடைபெற்றபோது பத்திரிகையாளராக இருந்த த. செ. ஞானவேல் இந்த வழக்கை புதிய கோணத்திலிருந்து திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும், இதற்கு, ’தோசா கிங் மசாலா அண்ட் மர்டர்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்.
ஹிந்தியில் உருவாகும் இந்தப் படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுடப் கலைஞர்களின் விவரங்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஞானவேல் வேட்டையன் வெளியீட்டு பணிகளில் இருக்கிறார். இது முடிந்ததும், தன் அடுத்த படமாக தோசா கிங் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.