நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான, ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் வெளியானது. இப்பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அறிவு வரிகளில் தனுஷ், ஜி.வி. பிரகாஷ், அறிவு மற்றும் சுப்லாஷ்லினி உள்ளிட்டோர் பாடியுள்ளனர். ரசிகர்களிடம் கவனம் ஈர்த்த இப்பாடல் யூடியூபில் 1 கோடி (10 மில்லியன்) பார்வைகளைப் பெற்று அசத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பலரும் மடிசார் புடவையில் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்கின்றனர். இவை, லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.