கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நடிகர் கார்த்தியின் அடுத்த பட அறிவிப்பு!

நடிகர் கார்த்தியின் 29-வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது!

நடிகர் கார்த்தி

Published On :

நடிகர் கார்த்தியின் 29-வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது!

நடிகர் கார்த்தி ’96’ திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் ’மெய்யழகன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கார்த்தியின் 27-வது திரைப்படமான மெய்யழகன் வருகின்ற செப். 27 அன்று வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய 28 வது படமாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறாற்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கள் வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ்

‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ்

இதற்கு அடுத்ததாக, கார்த்தி தன்னுடைய 29 வது படத்தில் ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இதற்கான அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

இந்தப் படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என்று அறிவிப்பு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.