
பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். 2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா ரனாவத் தனது சிறப்பான நடிப்பினால் இதுவரை 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
2019இல் ‘மணிகர்னிகா- ஜான்சி ராணி’ படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கியுள்ளார்.
எமர்ஜென்சி படத்தினை முழுக்க முழுக்க கங்கனா ரணாவத்தே இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தணிக்கை செய்யாமல் மிரட்டுவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்தப் படம் இன்று (செப்.6) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கைப் பெறாததால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. ஆங்கில் ஊடகத்தில் பேசிய கங்கனா ரணாவத் கூறியதாவது:
தனிமையில் கங்கனா ரணாவத்
சர்ச்சையான படங்களுக்கு ஹிந்தி சினிமா துறையிலும் ஆதரவு இருந்திருக்கின்றன. பத்மாவதி, உட்தா பஞ்சாப் ஆகிய படங்கள் எந்தப் பிரச்னைகளுமின்றி வெளியாகின. அதில் சிலரது கழுத்துகள், மூக்குகள், தலைகள் வெட்டப்படுகின்றன. ஆனால், அரசாங்கம் அந்தப் படங்களை ஆதரித்து வெளியிட்டது. ஆனால், என்னுடைய படமென்று வந்துவிட்டதால் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை...
குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. சினிமா துறையில் இருந்தும் யாரும் ஆதரவிக்கவில்லை. நான் எனக்கு மட்டுமே எனத் தோன்றுகிறது.
குறுகிய மனப்பான்மை கொண்டவர்களால்தான் இப்படி நடக்கிறது. இவர்களிடமிருந்து நான் எந்த நம்பிக்கையை பெறுவது? நானே தயாரித்து இயக்கிய படம் ரிலீஸ் ஆகாததை கொண்டாடும் சினிமா துறையினால் நான் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் தனிமையில் இருப்பதுபோல உணர்கிறேன் என்றார்.
ரிலீஸ் தாமதம் ஏன்?
இந்திரா காந்தியை கொலை செய்ததை, பிந்தர்வாலேவை காட்டக்கூடாது, பஞ்சாப் கலவரங்களை காட்டக்கூடாதென்றும் தான் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
இவைகளைத் தவிர்த்துவிட்டு வேறு எதைக் காட்டுவதென எங்களுக்கு தெரியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த நாட்டின் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன் என கங்கனா கூறியிருந்தார்.
சீக்கியர்கள் குறித்து தவறாக காண்பிப்பதாக இந்தப் படத்தை வெளியடக்கூடாதென சிரோமனி அகாலிதளம் மத்திய தணிக்கை வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.