மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 2018, அன்வேஷிப்பின் கண்டேத்தும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
நடிகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று கமர்ஷியல் ரீதியாக தோல்வியடைந்தது.
தற்போது, ஜிதின் லால் இயக்கத்தில் ஏஆர்எம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில், மூன்று தோற்றங்களில் டோவினோ வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்தப் படம் இதுவரை 5 நாள்களில் ரூ.50 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.