ஆஸ்கர் விருதுக்கான பயணம் எளிதானது அல்ல: லாபதா லேடீஸ் இயக்குநர்!

ஆஸ்கர் விருதுக்கான பயணம் எளிமையாக இருக்காது என்று லாபதா லேடீஸ் திரைப்பட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கான பயணம் எளிதானது அல்ல: லாபதா லேடீஸ் இயக்குநர்!
Published on
Updated on
1 min read

ஆஸ்கர் விருதுக்கான பயணம் எளிமையாக இருக்காது என்று லாபதா லேடீஸ் இயக்குநர் கிரண் ராவ் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அடுத்தாண்டு வழங்கப்படுகின்றன. இதற்காக, பல நாடுகளிலிருந்து திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவிலிருந்து அமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய, ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது குறித்து இயக்குநர் கிரண் ராவ் கூறுகையில், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வருடம் நிறைய நல்லப் படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனது படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதன் மூலம் அதிகளவிலான பார்வையாளர்களுக்கு காண்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தின் மீது அதிகளவில் நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பிடிக்கும் வகையில் இந்தப் படத்தில் ஏதாவது ஒன்று இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படம் பெண்களின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இது போன்ற ஒரு படம் ஆஸ்கார் விருதுக்கு அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்படும் போது அது மிகவும் ஊக்கமளிக்கிறது. பெண்கள் எதிர்கொள்ளும் பல பிரச்னைகள் மற்றும் இந்தப் படத்தில் நடித்துள்ள புதிய நடிகர்கள் மற்றும் அவர்களின் திறமைகளை மக்கள் பாராட்டியுள்ளனர்.

ஆஸ்கார் விருதுக்கான பயணம் எளிதானது அல்ல. ஆஸ்கர் விருதுகளுக்கான லாபதா லேடீஸ் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.

இந்த அங்கீகாரம் எனது படக்குழுவின் அயராத உழைப்புக்கு ஒரு சான்றாகும். இந்தப் படத்தைத் தயாரிக்க 4 முதல் 5 வருடங்கள் ஆனது. படக்குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வமே இந்தக் கதைக்கு உயிர் கொடுத்தது.

சினிமா எப்போதுமே இதயங்களை இணைக்கவும், எல்லைகளை கடந்த ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகிறது. இந்தியாவைப் போலவே இந்தப் படம் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களிடையே வரவேற்பு என்று நம்புகிறேன்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.