பருத்திவீரனுக்குப் பிறகு கார்த்தியைக் கட்டிப்பிடித்து வாழ்த்தினேன்... மெய்யழகன் குறித்து சூர்யா!

பருத்திவீரனுக்குப் பிறகு கார்த்தியைக் கட்டிப்பிடித்து வாழ்த்தினேன்... மெய்யழகன் குறித்து சூர்யா!

மெய்யழகன் திரைப்படம் குறித்து சூர்யா....
Published on

மெய்யழகன் படத்தைக் குறித்து நடிகர் சூர்யா பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

கார்த்தியின் 27-வது படமாக உருவான மெய்யழகன் படத்தை ச. பிரேம் குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான இப்படம் செப். 27 படம் திரைக்கு வருகிறது.

வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அரவிந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையேயான உறவைப் பழைய நினைவுகளுடன் பேசும் படமாக இது உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் கோவையில் நடைபெற்றது. அதில், படக்குழுவினர் உள்பட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டார். நிகழ்வில் சூர்யா பேசியதை பதிவேற்றியுள்ளனர்.

நடிகர் சூர்யா.
நடிகர் சூர்யா.

சூர்யா பேசும்போது, ”நம் அடையாளங்களில் நம்மைச் சுற்றிப் பார்த்துப் பழகுகிற உறவுகளும் இருக்கின்றனர். மெய்யழகன் அந்த மாதிரி உறவைப் பேசிற கதை. பருத்திவீரனுக்குப் பிறகு மெய்யழகனுக்காக கார்த்தியைக் கட்டிப்பிடித்து வாழ்த்தினேன். இப்படியொரு படத்தைத் தயாரிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பிரேம் குமாருக்கு நன்றி. அவரால் மட்டும்தான் இப்படியான கதையை எழுத முடியும்.

அரவிந்த் சுவாமிக்கும் கார்த்திக்கும் இடையேயான நடிப்பைப் பார்க்கும்போது பொறாமையே வந்துவிட்டது. படத்தைப் படமாக மட்டும் பாருங்கள். இது, வணிக ரீதியாக எவ்வளவு வசூலிக்கும் என்பது குறித்த பிரச்னை உங்களுக்கு (ரசிகர்கள்) வேண்டாம். மெய்யழகன் ஒரு அபூர்வமான திரைப்படம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com