

டோவினோ தாமஸின் ஏஆர்எம் திரைப்படம் வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.
மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டோவினோ தாமஸ். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 2018, அன்வேஷிப்பின் கண்டேத்தும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
நடிகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று கமர்ஷியல் ரீதியாக தோல்வியடைந்தது.
தற்போது, ஜிதின் லால் இயக்கத்தில் இவர் நடித்த ஏஆர்எம் திரைப்படம் ஓணம் வெளியீடாக திரைக்கு வந்ததுள்ளது. இதில், மூன்று தோற்றங்களில் டோவினோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்தப் படம் இதுவரை உலகளவில் ரூ. 87 கோடியைத் தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாயகனாக டோவினோ நடிப்பில் உருவான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் இதுதான். 2018 திரைப்படம் ரூ.175 கோடி வசூலித்தாலும் அதில் டோவினோவுடன் பல முன்னணி நடிகர்களும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.