நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் திரைப்படத்தின் 4 நிமிட காட்சியை வெளியிட்டுள்ளனர்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த ‘ரோமியோ’, ‘மழைப்பிடிக்காத மனிதம்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
தற்போது, ‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது படத்தின் முதல் 4 நிமிட காட்சியைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.