நடிகர் ராகுல் தேவ் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இதில், விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்த குட் பேட் அக்லி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறுகிறது. அதில், நடிகர்கள் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் இணையலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ராகுல் தேவ் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் தேவ் பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், மழை, முனி, அரசாங்கம், ஆதவன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர்.
குட் பேட் அக்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் அஜித் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.