நடிகர் சித்திக்
நடிகர் சித்திக்

பாலியல் வழக்கில் நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை!

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் நடிகர் சித்திக் மேல்முறையீடு
Published on

ஹேமா குழுவின் அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலகின் பிரபலங்கள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. மலையாள திரையுலக நடிகைகள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிர்வலையை ஏற்படுத்தினர்.

இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் பதவியில் இருந்து இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நடிகா் சித்திக் ஆகியோா் விலகினா். மலையாள திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் (‘அம்மா’) தலைவரும் பிரபல நடிகருமான மோகன்லால் உள்பட அனைத்து நிா்வாகிகளும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா்.

மலையாள திரையுலகில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் ஏராளமான படங்களில் சித்திக் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சித்திக் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த நடிகை கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடா்பாக நடிகா் சித்திக் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில், நடிகர் சித்திக் தனக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, நடிகைக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் மலையாள நடிகா் சித்திக்கு முன்ஜாமீன் அளிக்க கேரள உயா்நீதிமன்றம் மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சித்திக் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், சித்திக்கின் மனுவை இன்று (செப். 30) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சித்திக்கை கைது செய்யவும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதேவேளையில், விசாரணைக்கு ஆஜராக சித்திக்குக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com