அசோக் செல்வன் கதாபாத்திரத்துக்கு முதலில் தேர்வான நடிகர் இவர்தான்!
இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
இதனை நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது.நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனுவின் நடிப்பும் பெரிதும் ரசிக்கும் படியாக இருந்தது.
இப்படத்தின் வெற்றியைக் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். இதில் இயக்குநர் பா.இரஞ்சித், ஜெயக்குமார், நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் துணை இயக்குநர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: ரோட்டர்டமில் வரவேற்பைப் பெற்ற விடுதலை!
கடந்த வியாழக்கிழமை வெளியான ப்ளூ ஸ்டார் 4 நாள்களில் இந்திய அளவில் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் ஜெயக்குமார், “அசோக் செல்வன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் கவினை தேர்வு செய்தோம். அவருக்கும் கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அடுத்தடுத்த அவருடைய திரைப்பட வேலைகளால் இதில் நடிக்க முடியாமல் ஆனது. அதனால், அசோக் செல்வனிடம் கதை சொன்னேன். அவருக்குப் பிடித்திருந்தால் நடிக்க சம்மதித்தார்” எனக் கூறியுள்ளார்.
டாடா படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் கவின், தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார்.
— Neelam Productions (@officialneelam) January 29, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
