காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன.
தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்த ரெஜினா கலவையான விமர்சனங்களையே பெற்றன.
இந்நிலையில் எக்ஸில் கேள்வி-பதிலில் ரசிகர் ஒருவர் தெலுங்கு ரசிகர்களுக்காக ஒரு பாடலை பாட முடியுமா எனக் கேட்டார். அதற்கு சுனைனா, “என்னால் பாட முடியாது. ஆனால் குறிச்சி மடதபெட்டி பாடலுக்கு எனது கால்களை அசைக்காமல் இருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
மார்ச் மாதத்தில் தனது அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகுமெனவும் கூறியுள்ளார்.
மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. குறிப்பாக தமனின் துள்ளலிசையில் ஸ்ரீ லீலா, மகேஷ் பாபு நடனத்தில் குறிச்சி மடதபெட்டி பாடல் இன்ஸ்டாவில் 1 மில்லியனுக்கும் அதிகமாக ரீல்ஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.