பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சுசிலாவை 'அம்மா' என்றழைத்ததுதான் படத்தின் வெற்றி: பா.ரஞ்சித் புகழாரம்!

ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 

Published On :

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.

இதனை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலிலும் கலக்கி வருகிறது.நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வியின் நடிப்பும் பெரிதும் ரசிக்கும் படியாக இருந்தது. 

Story image

வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “தணிக்கைக் குழு இந்தப் படத்தில் பல பெயர்களை மாற்றக் கூறினார்கள். சாதிய பிரச்னைகள் இருக்கிறது. அதனால் படம் வெளியாவதில் சிக்கல் என மாற்றுக் கருத்துடையவர்கள் கூறினார்கள். இது சமத்துவத்தை வலியுறுத்தும் படம். இதற்கும் பிரச்னைகள் கொடுக்கிறார்கள். 

Story image

படத்தில் ஆதிக்க சாதியுடைய ஒரு இளைஞன் அம்மா வயதில் இருப்பவரை சுசிலா எனப் பெயர் சொல்லி அழைப்பதில் இருக்கும் வலியை இயக்குநர் சிறப்பாக கடத்தியிருந்தார். காதலியிடம் சொல்லி அழும் அசோக் செல்வன் அந்தக் காட்சியில் சிறப்பாக நடித்திருந்தார். சுசிலாவை அம்மா என்று அழைக்கும் அந்தக் காட்சி மிகவும் பிடித்திருந்தது. அதுதான் ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 

ப்ளூ ஸ்டார் படத்தில் சுசிலா கதாபாத்திரத்தில் லிச்சி ஆண்டனி சிறப்பாக நடித்திருந்தார். பலரும் அவரது கதாபாத்திரத்தினை பாராட்டி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.