குண்டூர் காரம் வெற்றிக்குப் பிறகு நடிகர் மகேஷ் பாபு ஜெர்மனி சென்றுள்ளார். ஜெர்மனியில் தான் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் உறையும் பனியில் காட்டில் சாகசப் பயணம் என பதிவிட்டுள்ளார்.
மகேஷ் பாபுவின் 29வது படமாக இயக்குநர் ராஜமௌலி இயக்க உள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: சர்தார் இயக்குநருடன் இணைந்த ரத்னகுமார்?
ஜெர்மனி சென்றுள்ள மகேஷ் பாபு உடற்பயிற்சி நிபுணர் டாக்டர் ஹாரி கோனிக் உடன் கடுமையான பயிற்சி எடுத்து வருகிறார். இது ராஜமௌலி இயக்க்கும் படத்துக்காக என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் படக்குழு இதுகுறித்து எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இதையும் படிக்க: எல்லாம் பொய்யானது: விராட் கோலியின் சகோதரர் உருக்கமான பதிவு!
இயற்கையை ரசிக்கும்படியாக புகைப்படங்களை மகேஷ் பாபு பகிர்ந்துள்ளார். இந்தப் பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் ராஜமௌலி படத்துக்கான ஒரு முன் தயாரிப்பானதாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் பாலிவு நடிகை தீபிகா படுகோன் இணைந்து நடிப்பாரெனவும் இந்தோனேஷியன் நடிகை செல்ஷீ இஸ்லான் போன்ற முக்கியமான சினிமா பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.