மேயாதமான், ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ரத்னகுமார். மாஸ்டர், லியோ படங்களுக்கு துணை வசனகர்த்தாவாக வேலை செய்திருக்கிறார்.
லியோ வெற்றி விழாவில் நடிகர் ரஜினி பேசிய காக்கா கழுகு கதை குறித்து விமர்சித்து பேசியது வைரலானது. லோகேஷ் தயாரிப்பில் நயன்தாராவுடன் புதிய படத்தினை இயக்க ஸ்கிரிப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறியிருந்தார். தற்போது சர்தார் 2 படத்தில் பிஎஸ். மித்ரனுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: காலத்தால் அழியாத கலைஞன் நாகேஷ்: கமல்ஹாசன் நெகிழ்ச்சி!
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில் இப்பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பி.எஸ்.மித்ரன் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இப்படப்பிடிப்புக்கான பூஜை வருகிற பிப்.2 ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளதாகவும் இப்படமே கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி மார்ச் மாதம் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: லண்டன் பறந்த துப்பறிவாளன் 2 படக்குழு!
நடிகர் ரஜினியுடன் லோகேஷ் இயக்கவுள்ள தலைவர் 171 படத்தில் ரத்னகுமார் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது புதிய படத்தில் பணியாற்றாமல் இந்தப் படத்தில் ஏன் இணைந்தார்? அந்தப் படம் கைவிடப்பட்டதா என சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.