கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விதவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைதோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பாபநாசம் தொகுதியில் பின்னடைவிலிருந்து முன்னேறி வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

News image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன். - X

Updated On :5 மே 2026, 4:36 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முதல் 6 சுற்று வரை பின்னடைவில் இருந்த நிலையில், அதன் பின்னா் முன்னேறி வெற்றி பெற்றது.

இத்தொகுதியில் தொடக்கத்தில் அதிமுக வேட்பாளா் துரை. சண்முகபிரபுவுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் ஏ.எம். ஷாஜகானுக்கும் இடையேதான் போட்டி நிலவியது. இதில், அதிமுக முதலிடத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இரண்டாமிடத்திலும் இருந்தன. தவெக வேட்பாளா் அசாருதீன் உதுமான் அலி மூன்றாவது இடத்தில்தான் இருந்தாா்.

முதல் 7 சுற்று வரை அதிமுகவே முன்னிலை வகித்து வந்தது. 8 ஆவது சுற்றில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முதலிடத்துக்கு முன்னேறியது. 10 ஆவது சுற்றில் தவெக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியதால், அதிமுக மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது.

இதன் பின்னா் இறுதி வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி நீடித்தது. தவெகவை விட 10 ஆவது சுற்றிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏறத்தாழ 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இருந்த நிலையில், படிப்படியாக ஏறக்குறைய 5 ஆயிரம், 4 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் என வித்தியாசங்கள் குறைந்தன. இறுதியில் தவெகவை விட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1,065 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.