லண்டன் பறந்த துப்பறிவாளன் 2 படக்குழு! 

நடிகர் விஷால் இயக்கும் துப்பறிவாளன் 2 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 
லண்டன் பறந்த துப்பறிவாளன் 2 படக்குழு! 
Published on
Updated on
1 min read

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். படத்தின் வெற்றி காரணமாக, இரண்டாம் பாக பணிகளில் மிஷ்கின் கவனம் செலுத்தினார். ஆனால், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இப்படத்திலிருந்து மிஷ்கின் விலகினார்.

படம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஷால் தானே இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

அதேநேரம், துப்பறிவாளன் - 2 படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, தன் அடுத்தடுத்த படங்களில் விஷால் கவனம் செலுத்தினார். அவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. தற்போது, ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

சமீபத்தில் எக்ஸ் தளத்தில் துப்பறிவாளனைக் குறிக்கும் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்திருந்தார். இதனால், விஷால் துப்பறிவாளன் - 2 படத்தின் பணிகளை மேற்கொள்வார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் விஷால் தனது குழுவுடன் லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்புக்கான பகுதிகளை பார்வையிட்டுள்ளதாகவும் பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நாசர், பிரசன்னம் ரஹ்மான் உள்பட பலர் நடிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.