உடல்நலக் குறைவு காரணமாக மயங்க் அகர்வால் திரிபுராவின் அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் மயங்க் அகர்வால் கர்நாடக அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறார். கிரிக்கெட் போட்டிக்காக புதுதில்லி செல்லும் விமானத்தில் புறப்பட தயாராக இருந்தபோது மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் விமானத்திலேயே இரண்டு முறை வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் திரிபுராவின் அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: எல்லாம் பொய்யானது: விராட் கோலியின் சகோதரர் உருக்கமான பதிவு!
கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷன் மேலாளர் ரமேஷ், “இது குறித்து விரிவான தகவல்கள் தெரியவில்லை. இன்று மயங்க் அகர்வாலை பெங்களூருவிற்கு அழைத்து செல்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு, “நான் தற்போது நன்றாக இருக்கிறேன். கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறேன். உங்களது அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.
ரஞ்சி கோப்பையில் 2 சதங்கள், 1 அரைசதம் என அசத்தி வருகிறார் கர்நாடக அணியின் கேப்டன் மயங்க் அகர்வால். தற்போது இவருக்குப் பதிலாக நிகின் ஜோஷ் அணியின் கேப்டாக செயல்பட்டு வருகிறார்.