மறைந்த நடிகர் நாகேஷின் நினைவுநாளில் நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகள் கோலோச்சியவர் நகைச்சுவை நடிகர் நாகேஷ். அவருடைய முதல் படம் “மனமுள்ள மறுதாரம்” 1958இல் வெளியானது. இப்படத்தில், நகைச்சுவை நடிகர் “டணால்” தங்கவேலுவின் தங்கையைப் பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளைப் பையனை தங்கவேலு வீட்டுக்குக் கூட்டிவரும் கல்யாணத் தரகராக புரோகிதர் வேஷத்தில் நடித்திருப்பார் நடிகர் நாகேஷ்.
இதையும் படிக்க: லண்டன் பறந்த துப்பறிவாளன் 2 படக்குழு!
2008இல் தசாவதாரம் படத்தில் நாகேஷ் தனது கடைசிப்படத்தினை நடிகர் கமலுடன் நடித்திருந்தார். பல்வேறு மேடைகளில் நாகேஷ் குறித்து பேசியிருக்கிறார் நடிகர் கமல்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை. கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர். காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய மின்தடை! - உள்ளிக்கோட்டை
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாத்திரைகளைத் திருடி விற்ற மூவா் கைது

இன்றைய மின்தடை! - கிளுவங்காட்டூா்

காங்கயத்தில் ஒரே நாளில் 3 விபத்துகள்: 5 போ் படுகாயம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



