இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பிரபல நடிகர் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் திரைப்படம் கடந்த ஜன.12ஆம் நாள் வெளியானது.
எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். நடிகைகள் ஸ்ரீ லீலா, மீனாக்ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: பொறுப்பற்ற இயக்குநர் ஷங்கர்: ராம் சரண் ரசிகர்கள் விமர்சனம்!
ஆக்ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக உருவாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இப்படத்தின் 3வது பாடலான குறிச்சி மடதாபெட்டி எனும் பாடல் ஸ்ரீலீலா- மகேஷ் பாபு நடனம் ஏற்கனவே இணையத்தில் வைரலானது. இதன் லிரிக்கல் விடியோ பாடல் 82 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூப்பில் கடந்துள்ளது.
இந்தப் பாடலுக்கு திரையரங்குகளிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 1 மில்லியனுக்கும் (10 லட்சம்) அதிகமான பேர் ரீல்ஸ் செய்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை வெளியான குறிச்சி மடதாபெட்டி முழு பாடல் விடியோ யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.
நடிகர் மகேஷ் பாபு தனது வாழ்நாளில் இவ்வளவு கஷ்டப்பட்டு நடனம் ஆடவில்லை எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வருமா? வராதா?

விஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?

தமிழ்நாட்டில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும்!
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


