வேலை விட்டதும் நாடகம் பார்க்க ஓடுறோம்: சீரியல் நடிகையிடம் பேசிய பெண்கள்!

முத்தழகு தொடரில் நடித்துவரும் நடிகை ஷோபனா, தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 
வேலை விட்டதும் நாடகம் பார்க்க ஓடுறோம்: சீரியல் நடிகையிடம் பேசிய பெண்கள்!

முத்தழகு தொடரில் நடித்துவரும் நடிகை ஷோபனா, தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

அன்றாட கூலி வேலைக்குச் சென்று திரும்பும் பெண்கள், நடிகை ஷோபனாவின் காரைப் பார்த்ததும், அவரைச் சூழ்ந்து மகிழ்ச்சியில் அவருடன் கைக்குலுக்கி நலம் விசாரித்தனர். 

அதனைத் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துக்கொண்டும் அவர்களுடன் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு கலந்துரையாடிய ஷோபனாவுக்கு சமூகவலைதளத்தில் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3.30 மணிக்கு முத்தழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை ஷோபனா முத்தழகு பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்கிறார். அவர்களுடன் வைஷாலி தணிகா, லக்‌ஷ்மி வாசுதேவன் உள்ளிட்டோரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

காதலி வைஷாலி , நாயகன் ஆஷிஷ் சக்ரவர்த்தி, நாயகி ஷோபனா
காதலி வைஷாலி , நாயகன் ஆஷிஷ் சக்ரவர்த்தி, நாயகி ஷோபனா

கிராமத்தில் வளர்ந்த முத்தழகு என்ற இளம்பெண், நகரத்து பின்னணி கொண்ட நாயகனை திருமணம் செய்துகொண்டு நகரத்துக்கு வருகிறார். அங்கு நாயகனை விரும்பிய பெண் ஒருவர், முத்தழகுக்கு செய்யும் இடையூறுகளே இத்தொடரின் மையக்கரு.

இதனிடையே முத்தழகு தொடரின் நாயகியான ஷோபனா, தனது ரசிகைகளுடன் கலந்துரையாடியுள்ளார். சென்னை அருகேவுள்ள திருவேற்காடு வழியாக செல்லும்போது, அவ்வழியாக அன்றாட பணியை முடித்துவிட்டுச் சென்ற பெண்களுடன் காரை நிறுத்தி உரையாடியுள்ளார். 

கூலித் தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் நடிகை ஷோபனா
கூலித் தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் நடிகை ஷோபனா

அப்பெண்களும் முத்தழகு தொடரை தொடர்ந்து பார்ப்பதாகவும், வேலை முடிந்ததும் நாடகம் பார்ப்பதற்காகவே வீட்டிற்கு ஓடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.  உங்கள் நடிப்பு மிகவும் நன்றாக உள்ளதாகவும், சீரியலில் பணத்தை முகத்தின் மீது வீசி எறிந்தபிறகு என்ன ஆயிற்று எனவும் கேட்கின்றனர். அதற்கு பதிலளித்த நடிகை ஷோபனா, நீங்க பாருங்க என்ன நடந்துச்சுனு, என்ன நடந்திருக்கும்னு நீங்க நினைக்குறீங்க என அவர்களிடம் கேள்வி கேட்க, ரசிகர்களுடன் கலந்துரையாடினார். 

கிராமப்புற பகுதிகளில் அன்றாட வேலை செய்யும் பெண்களிடம் முத்தழகு தொடர் சென்று சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

காரை நிறுத்தி தனது ரசிகைகளுடன் கலந்துரையாடிய நடிகை ஷோபனாவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com