2 ஆண்டுகளை நிறைவு செய்யும் எதிர்நீச்சல்!

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் தொடர் இன்றுடன் (பிப்.7) 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 
2 ஆண்டுகளை நிறைவு செய்யும் எதிர்நீச்சல்!

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் தொடர் இன்றுடன் (பிப்.7) 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

சன் தொலைக்காட்சியில் கடந்த 2022 பிப்ரவரி 7ஆம் தேதிமுதல் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பிப். 7ஆம் தேதியான இன்றுடன் எதிர்நீச்சல் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய ஆரம்பக்கட்டத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. பெண் சுந்தந்திரம், கலாசாரம் குறித்து பல சர்ச்சையன கருத்துகளும் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட்டது. 

சின்னத்திரை தொடர் என்றாலே பிற்போக்குத் தனங்கள் நிறைந்தவைதான் என்ற கருத்து பரவலாகியுள்ள நிலையில், படத்திற்கு இணையாக பிற்போக்குத்தனங்கள் குறித்து திரைக்கதை மூலம் கேள்வி எழுப்பியது எதிர்நீச்சல் தொடர். 

எதிர்நீச்சல் குழுவினர்
எதிர்நீச்சல் குழுவினர்

இதனால், ஒருசில காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. அது தொடர்பான விவாதங்களும் பரவலானது. இதுவே எதிர்நீச்சல் தொடர் அதிக அளவிலான மக்களிடம் சென்று சேர்ந்ததற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. 

சின்னத்திரையில் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் மருமகள்களின் துயரங்களையே காட்டிவந்த சின்னத்திரையில், மருமகள்கள் மூலம் பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்டது எதிர்நீச்சல் தொடர்.

 ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் உள்ள ஆண்களை திருமணம் செய்துகொண்டு செல்லும் பெண்களை மையப்படுத்தியும்,. அந்த வீட்டில் பிறந்த பெண்களை மையப்படுத்தியும் எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்நீச்சல் தொடர் முதன்மை நடிகைகள்
எதிர்நீச்சல் தொடர் முதன்மை நடிகைகள்

கடந்த ஆண்டு சிறந்த தொடருக்கான விருதையும் எதிர்நீச்சல் குழு வென்றது. சின்னத்திரை தொடர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் சிறந்த நடிகை, சிறந்த ஜோடி, சிறந்த வில்லன், சிறந்த வசனம், சிறந்த இயக்குநர் என பல பிரிவுகளில் எதிர்நீச்சல் விருதுகளை வென்றுள்ளது. 

விருது பெறும் எதிர்நீச்சல் குழு
விருது பெறும் எதிர்நீச்சல் குழு

ஒட்டுமொத்த சின்னத்திரை தொடர்களுடன் பார்க்கும்போது டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதல் 5 இடங்களில் ஒன்றாக எதிர்நீச்சல் தொடர் இடம்பெற்று வருகிறது. 

2023ம் ஆண்டில் பெரும்பாலான வாரங்களில் எதிர்நீச்சல் தொடர் டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com