‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கார்த்திக் நரேனின் நிறங்கள் மூன்று: வெளியானது முதல் பாடல்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நிறங்கள் மூன்று படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:43 pm

DIN

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன், அதர்வா முரளியுடன் இணைந்து உருவாக்கிய திரைப்படமான 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. இதில் அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். 

Story image

தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இவர் இயக்கிய நரகாசூரன் படம் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யூ ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், 2024-ல் இப்படம் வெளியாகும் எனத் தயாரிப்புத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

Story image

இப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், ரஹ்மான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தாமரை எழுதிய இந்தப் பாடலுக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.