பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அமீர் கான். இவர் நடிப்பில் வெளியான தங்கல் உலகளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று வசூலைக் குவித்தது. தொடர்ந்து, நல்ல படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான ‘லால் சிங் சத்தா’ விமர்சன ரீதியாக நல்ல படமாக இருந்தாலும் ரசிகர்களால் தோல்விப்படமாக்கப்பட்டது. காரணம், இப்படம் வெளியான நேரத்தில் ‘பாய்காட் பாலிவுட்’ என ரசிகர்களால் தொடர்ச்சியாக இந்திப்படங்கள் புறக்கணிப்பைச் சந்தித்தன.
சமீபத்தில், சென்னையில் ஏற்பட்ட கனமழையால் குடியிருப்பில் சிக்கியிருந்த விஷ்ணு விஷால் மற்றும் அவரின் மனைவி ஜுவாலா கட்டாவை மீட்டபோது எதிர்பாராத விதமாக, பாலிவுட் நடிகர் அமீர்கானும் அதே பகுதியில் இருந்திருக்கிறார். அவரைத் தொடர்பு கொண்டவர்கள், பத்திரமாக அமீர் கானை மீட்டு விஷ்ணு விஷாலுடன் அழைத்து வந்தனர்.
இந்நிலையில், அமீர்கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தத் இணையின் மகளான இரா கானுக்கும் உடற்பயிற்சியாளர் நுபுர் ஷிக்காரேவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
இதில், நுபுர் எந்தவித திருமண ஆடைகளையும் அணியாமல் உடற்பயிற்சிக்கான ஆடையுடன் வீட்டிருந்து 8 கிலோமீட்டர் ஓட்டமாக வந்து திருமண மண்டபத்தை அடைந்திருக்கிறார். மேலும், அதே ஆடையுடனே திருமண ஒப்பந்தமும் செய்திருக்கிறார்.
அமீர் கானின் மகளுக்கு மிக எளிய முறையில் வித்தியாசமாக நடந்த இத்திருமணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Aamir Khan's would be son-in-law #NupurShikhare sits on the dhol #AamirKhan #IraKhan pic.twitter.com/k1OMFNczog
â BollyHungama (@Bollyhungama) January 3, 2024
மேலும், திருமண நிகழ்வில் பங்கேற்ற தன் முன்னாள் மனைவி கிரண் ராவுக்கு அமீர் கான் முத்தம் கொடுத்த விடியோவையும் ரசிகர்கள் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!

வணிகமயத்தின் பிடியில்...
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


