வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குத்துச்சண்டை பயிலும் எதிர்நீச்சல் நடிகை! சீரியலில் சண்டைக்காட்சியா?

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்தில் நடித்துவரும் ஹரிபிரியாவுக்கு அதே தொடரில் மகளாக நடித்துவரும் மோனிஷா குத்துச்சண்டை பயிற்சியை அளிக்கிறார். 

News image
Updated On :10 ஜனவரி 2024, 10:37 am


எதிர்நீச்சல் தொடரில் தொடரில் நடித்துவரும் நடிகை ஹரிபிரியா இசை குத்துச்சண்டை பயிலும் விடியோ வெளியாகியுள்ளது. 

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்தில் நடித்துவரும் ஹரிபிரியாவுக்கு அதே தொடரில் மகளாக நடித்துவரும் மோனிஷா குத்துச்சண்டை பயிற்சியை அளிக்கிறார். 

குழந்தை நட்சத்திரமான மோனிஷா, தற்காப்புக் கலையில் கைதேர்ந்தவர். கராத்தே, குத்துச்சண்சை, களரி, சிலம்பம், வாள் சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்டவற்றை சிறு வயதுமுதலே பயின்று வருகிறார். 

தனது சகோதரியுடன் சேர்ந்து தற்காப்புக் கலையில் கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளார். தற்காப்புக் கலையில் கின்னஸ் சாதனை படைத்த உலகின் முதல் சகோதரிகள் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர். 

சகோதரியுடன் நடிகை மோனிஷா

சகோதரியுடன் நடிகை மோனிஷா

தற்காப்புக் கலை மட்டுமின்றி இசையையும் முறையாகப் பயின்றுள்ளார் மோனிஷா. தற்போது எதிர்நீச்சல் தொடரில் ஆணாதிக்கம் நிறைந்த ஆதி குணசேகரனுக்கு மகளாக நடித்து வருகிறார். 

இதனிடையே எதிர்நீச்சலில் நடித்துவரும் ஹரிபிரியா இசைக்கு நடிகை மோனிஷா குத்துச்சண்டை பயிற்சி அளிக்கும் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

பயிற்சியில் நடிகை மோனிஷா

பயிற்சியில் நடிகை மோனிஷா

இதில் முறைப்படி குத்துச்சண்டை பயிற்சி எடுப்பதைப்போன்று விடியோ பதிவாகியுள்ளது. ஹரிபிரியா பகிர்ந்துள்ள இந்த விடியோக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்நீச்சல் தொடரில் சண்டைக்காட்சிகள் வரவுள்ளதா? அதற்காக நந்தினி பயிற்சி எடுக்கிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.