இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பிரபல நடிகர் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் திரைப்படம் கடந்த ஜன.12ஆம் நாள் வெளியானது.
எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். நடிகைகள் ஸ்ரீ லீலா, மீனாக்ஷி சௌத்ரியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் எமோஷ்னல் என்டர்டெயின்மென்ட்டாக உருவாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. படம் 10 நாளில் ரூ. 231 கோடி வசூலித்துள்ளது.
இப்படத்தின் 3வது பாடலான குறிச்சி மடதாபெட்டி எனும் பாடல் ஸ்ரீலீலா- மகேஷ் பாபு நடனம் ஏற்கனவே இணையத்தில் வைரலானது. இதன் லிரிக்கல் விடியோ பாடல் 60 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியூப்பில் கடந்துள்ளது.
இந்தப் பாடலுக்கு திரையரங்குகளிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 1 மில்லியனுக்கும் (10 லட்சம்) அதிகமான பேர் ரீல்ஸ் செய்து அசத்தி வருகின்றனர்.
படக்குழு இதனைப் பகிர்ந்து இணையத்தை ஆக்கிரமிக்கும் பாடலென பதிவிட்டுள்ளது.
Super @urstrulyMahesh & @sreeleela14âs SUPER Energetic Dance moves takes over the internet!! #KurchiMadathapetti hits a MASSive Million+ Reels & counting on #Instagram
â Guntur Kaaram (@GunturKaaram) January 24, 2024
- https://t.co/LD4ABi4vR6
A @MusicThaman Musical #Trivikram #Thaman @meenakshiioffl⦠pic.twitter.com/SZWifdu0Vo
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் மோசடி கும்பல் செயல்படுகிறது: சஞ்சய் ராவத்!

தலைவரான தனுஷ்! குழப்பத்தில் ரசிகர்கள்!
பஞ்சாப் வினாத்தாள் கசிவு! அமைச்சரை ராஜிநாமா செய்யக் கோரி பாஜக எம்பிக்கள் போராட்டம்!

பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்களால் பரபரப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



