
சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்த புதியத்தொடரில் விமலுக்கு ஜோடியாக பாவ்னி மற்றும் திவ்யா துரைசாமி கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
2013இல் எழில் இயக்கத்தில் வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் நகைச்சுவையில் மக்கள் மத்தியில் பிரபலமானது. இதயக்கனி என்ற அவரது பெயரும் சூரியின் நகைச்சுவைகளும் இன்றும் மக்களால் ரசிக்கப்படுகிறது.
வித்யாசாகர் இந்தப் படத்துக்கு இசையமைக்க இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பாக பி.ரவிசந்திரன் இந்தப் படத்தினை தயாரிக்கிறார்.
இதையும் படிக்க: தங்கையின் நிச்சயதார்த்த விழா புகைப்படங்களை பகிர்ந்த சாய் பல்லவி!
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மே மாதம் படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஜன.27ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.