
அன்பே வா தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் அன்பே வா தொடர் 1000 எபிஸோடுகளை கடந்துள்ளது. 2020 நவம்பர் முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் மூன்று ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவருகிறது.
இந்தத் தொடரில் டெல்னா டேவிஸ் நாயகியாகவும், விராட் நாயகனாகவும் நடித்து வந்தார். தற்போது நாயகியாக ஸ்ரீ கோபிகா நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அன்பே வா தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த தொடர் முடிவடையவுள்ளது, அத்தொடரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: குதிரையேற்ற பயிற்சியில் சமந்தா!
அன்பே வா தொடர் நிறைவடைய உள்ளதால், இரண்டு புதிய தொடர்கள் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.