மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளையொட்டி ராஜ்கட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நாளில் மகாத்மா காந்தியின் அர்பணிப்பு மற்றும் குணங்களை நினைவு கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், “தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக.” எனப் பதிவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி 1948-ல் நாதுராம் விநாயக் கோட்சே எனும் இந்து தேசியவாதியால் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கமல்ஹாசன் ‘ஹேராம்’ படத்தை இயக்கியிருந்தார். காந்தியைச் சுட்டுக்கொல்ல கிளம்பும் ஒரு மனிதனின் மனமாற்றத்திற்குக் காந்தியே காரணமாக அமைவதே இப்படத்தின் மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

போலீஸில் புகார் அளித்த மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டுக் கொன்ற கணவன் கைது!

தென்னாப்பிரிக்கா மோசமான பேட்டிங்: 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து!

தில்லியில் புதிய வெள்ளக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம்: அமைச்சா் தகவல்

எல்பிஜி சிலிண்டர் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா?
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

