சின்னத்திரை நடிகையின் அந்தரங்க விடியோ சர்ச்சையில் பாடகி சின்மயி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சின்னத்திரை தொடரில் நடித்து வரும் இளம் நடிகையொருவர் சினிமா வாய்ப்புக்காக ஒருவரிடம் அந்தரங்கமாக பேசிக்கொண்டிருக்கும் விடியோ சில நாள்களுக்கு முன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாடகி சின்மயி இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “இளம் நடிகையின் அந்தரங்க விடியோவை வெளியிட்டதும் அதைப்பகிர்வதும் ஆண்கள்தானே. தமிழக ஆண்கள் லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்கின்றனர். ஆனால், இந்த நாட்டில் லஞ்சம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பது பற்றி யாரும் பேசுவதில்லை.
பெண் சமரசம் செய்யாததால் வேலையை இழந்திருக்கலாம் என்று இப்போது ஆண்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் (திடீரென்று நீதி பற்றிய பேச்சு மற்றும் பல புலம்பல்கள்) - நியாயமான கருத்து, நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தன்னிடம் வேலை செய்யும் பெண்ணிடம் பாலியல் தேவைகளைக் கேட்கும் அந்த அருவருப்பான மனிதனைப் பற்றி யாருமே பேசவில்லை. இப்படியானவர்கள் தொடர்ச்சியாக இதைத்தான் செய்துகொண்டிருக்கின்றனர். இருந்தாலும் மக்களால் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால், பெண் தன்னை தொடர்ந்து அழித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது?
அப்படிப்பட்ட ஆண்கள் விரும்பினால், வெளிப்படையாக விபச்சார புரோக்கர்களாக மாற வேண்டும். இந்த நாட்டில் அதற்கு பஞ்சமில்லை. ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இங்கு பெண்களும் சிறுமிகளும் வெளிப்படையாகவே வியாபாரத்திற்குக் கடத்தப்படுகிறார்கள், விநியோகிக்கப்படுகிறார்கள், சத்தமின்றி கொல்லப்படுகிறார்கள். அவர்களின் உடல்களை அருகே உள்ள மரங்களில் தொங்கவிடுகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் ஒரு சிறுமி தொங்கவிடப்பட்டதுபோல.
இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்ட ஆண்கள் கலை, தொலைக்காட்சி, ஊடகம் மற்றும் திரைப்படங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இதனால், கலையைச் சமூகத்திற்கும் நம் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவலாம்.
நடிகைகளிடம் பாலியல் உதவிகளைக் கேட்ட ஆண்கள் தங்கள் குடும்பங்களுக்குள் 'மரியாதைக்குரிய' இடங்களில் இருக்கின்றனாரா? அவர்களின் மனைவி, தாய், சகோதரி மற்றும் மகளிடம் எப்படி நடந்துகொள்கின்றனர்?
இப்படியான ஆண்களுக்கு வசீகரம், தைரியம், அறிவு, திறமை என எதுவும் இல்லாமல் பெண்களை மோசமாக நடத்த முடியும். நான் கூறுவது, அப்படிப்பட்ட பிரயோஜனமில்லாத ஆண் என்பவன் தோல்வியடைந்தவன். அவர்களை நினைத்து வருந்துகிறேன். அந்த விடியோவுக்கு பின்னால் இருந்த ஆண்கள் யார்?
ஒரு இழிமகன் எடுத்த விடியோவையும் அதற்கான லிங்க்கையும் பல இழிமகன்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா? சரி. பெண்ணியம் பேசும் முற்போக்கு நாட்டில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை பேரும் நாசமா போங்க, அழிஞ்சு போங்க, உங்களை இப்படி வளர்த்தவங்களோட கட்டைல போங்க.” என மிகக் கடுமையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்புரான் ரூ.200 கோடி வசூல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.