
பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் நடிப்பில் ஜான் விக் 5 படம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஜான் விக் படங்களுக்கென்று சினிமா உலகில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவும் கடைசி பாகத்தின் சண்டைக் காட்சிகள் இந்தப் படத்துக்கு ஒரு கல்ட் அந்தஸ்தை கொடுத்தது.
கடைசியாக வெளியான ஜான் விக் 4 திரைப்படம் கடந்த 2023இல் வெளியாகி 440 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 37ஆயிரம் கோடி) வசூலித்து அசத்தியது.
இந்நிலையில் இதன் ஐந்தாம் பாகம் உருவாகவிருப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
ஜான் விக் படத்தின் 4 பாகங்களை இயக்கிய சார்லஸ் எஃப். ஸ்டாஹெல்ஸ்கி மீண்டும் 5ஆவது பாகத்தை இயக்கவிருக்கிறார்.
லயன்ஸ்கேட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜான்விக் முதன்முதலாக 2014இல் தொடங்கியது. கீனு ரீவ்ஸ் தொழிமுறை கொலைக்காரர் ஆக இருந்து ஓய்வுபெற்றவர். அவரை மீண்டும் இந்தத் தொழிலுக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள்.
நாயகனின் வளர்ப்பு நாளை கொன்றுவிடுகிறார்கள். இதனால், அவர் வில்லன்களை தேடித்தேடி கொலை செய்கிறார்.
‘ஃப்ரம் தி வேர்ல்ட் ஆஃப் ஜான் விக்: பாலேரினா ' என்ற படத்தில் அன்னா டீ ஆர்ம்ஸ் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்த அனிமேஷன் படத்தில் கீனு ரீவ்ஸ் குரல் கொடுத்துள்ளார்.
இந்தத் தயாரிப்பு நிறுவனம் கண்பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்த யென்னை மையமாக வைத்து புதிய அனிமேஷன் படத்தையும் உருவாக்கவிருக்கிறது. இதை யென் இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு பேட்மேன் 2 படத்துக்கு கதை எழுதிய மாட்டிசன் டாம்லின் கதை எழுதுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.