ஆஸ்கர் விருதுப் பிரிவில் புதிய பிரிவை இணைந்துள்ளனர்.
திரைத்துறையில் மிக உயரிய விருதுகாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது விழா அண்மையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில், அனோரா திரைப்படம் 5 விருதுகளை அசத்தியது.
இந்த நிலையில், ஆஸ்கரின் 100-வது ஆண்டு விழாவிலிருந்து (2028 ஆம் ஆண்டு) சிறந்த சண்டை வடிவமைப்புக்கான பிரிவும் ஆஸ்கர் விருது பட்டியலில் இணைக்கப்படும் என தி அகாதெமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அகாதெமி வெளியிட்ட பதிவில், “ திரைப்படங்களின் மேஜிக்குகளுக்கு சண்டைகளும் பாகங்களாகவே இருக்கின்றன. இனி அவை ஆஸ்கர் விருதுப்பட்டியலிலும் இருக்கும். 2028-ல் ஆஸ்கரின் 100-வது விழாவிலிருந்து சண்டை வடிவமைப்புக்கான விருது வழங்கப்படும். 2027 ஆம் ஆண்டு வெளியாகும் படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.