நடிகர் நானி நடித்துள்ள ஹிட் - 3 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நானி தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். இறுதியாக, இவர் நடித்த சரிபோத சனிவாரம் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப்படமானது.
தற்போது, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
இந்த நிலையில், சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வருகிற மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.