
நடிகர்கள் சந்தானம், சூரியின் திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன.
சந்தானம் மற்றும் சூரி நகைச்சுவை நடிகர்களாக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வளர்ந்துள்ளனர். இருவரின் திரைப்படங்களுக்கென ரசிகர்களும் உருவாகிவிட்டதால், வசூல் நாயகர்களாகவும் மாறியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் சூரியின் மாமன் ஆகிய திரைப்படங்கள் மே 16 ஆம் தேதி வெளியாகின்றன.
இதில், சந்தானம் முழு நகைச்சுவைக் கதையிலும் சூரி உறவுகளின் அன்பைப் பேசும் உணர்ச்சிப்பூர்வமான கதையிலும் நடித்துள்ளனர்.
திரைத்துறையில் நகைச்சுவை நடிகர்களாகத் தங்களின் வாழ்வைத் துவங்கிய இரண்டு நடிகர்கள் நாயகர்களாக ஒரே நாளில் அவரவர் படங்களுடன் வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: இயக்குநர் ஸ்டான்லி காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.