
சின்ன திரை நடிகை அஸ்வதி, தன்னுடன் நடிக்கும் சக நடிகையான ஷெஹானாஸுக்கு தாலி கட்டியுள்ளார். இதேபோன்று ஷெஹானாவும் அஸ்வதிக்கு தாலி கட்டியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், விளம்பரங்களிலும் நடித்து சின்ன திரையில் நுழைந்த அஸ்வதி, மனசினக்கர என்ற தொடரில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இவர் தமிழில் மோதலும் காதலும் தொடரில் இளம் தலைமுறை ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் மலர் என்ற தொடரிலும் நடித்திருந்தார்.
தற்போது மலையாளத்தில் ஒளிபரப்பாகிவரும் அபூர்வ ராகங்கள் தொடரில் நாயகியாக நடித்துவருகிறார். இந்தத் தொடரில் ஆசிரியையாக நடித்துவரும் இவர், தன்னுடைய வசீகரமான தோற்றத்தாலும் நடிப்பாலும் அந்த பாத்திரத்துக்கு வலுசேர்த்து வருகிறார்.
மலையாளத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தத்தொடரில் தற்போது திருமணக் காட்சி எடுக்கப்படுகிறது. இத்தொடரில் நடிகை ஷெஹானாஸ் உசேனுக்கும் திருமணம் நடக்கிறது.
திருமணத்தின்போது தாலி கட்டியபடி நாயகி இருக்கும்படியான காட்சிக்கு அஸ்வதியும், ஷெஹானாஸும் மாறி மாறி தாலி கட்டிக்கொண்டு நடிப்பதற்கு தயாராகின்றனர். மேக்கப் போட்டுக்கொள்ளும்போது தாலி கட்டிக்கொண்டு நடிப்பது வழக்கம்.
ஆனால், குழந்தைத்தனம் நிறைந்த இந்த இரு நடிகைகளும் விளையாட்டாக மாறி மாறி தாலி கட்டிக்கொண்டு அதனை விடியோவாகவும் பதிவிட்டுள்ளனர். இந்த விடியோவை பலர் தவறாகப் புரிந்துகொண்டு எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர்களாக கனிகா, சாக்ஷி அகர்வால்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.